ADDED : அக் 11, 2025 03:41 AM

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மத்திய அரசின் ஓய்வூதிய சரிபார்ப்பு விதிகளின் பிரிவு 49, 50ஐ திரும்ப பெறுவது, 8வது ஊதியக்குழு அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் புவனேசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது அலிபாத், செயலாளர் செல்வின் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஆலோசகர் கண்ணன் பேசினர். மாவட்ட நிதிக்காப்பாளர் ராஜன் நன்றி கூறினார்.
புதிய ஓய்வூதிய மசோதாவை திரும்ப பெறக் கோரி ஓய்வூதியர் நலக்கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் பி.எஸ்.என்.எல் தொலைபேசி அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.பி.டி.பி.ஏ., மாவட்டச் செயலாளர் புளுகாண்டி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் கோவிந்தராஜ், சண்முகம், தபால்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் பேசினர்.