/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் கடைகளில் தொடரும் ஊழியர்கள் பற்றாக்குறை அலைக்கழிக்கப்படும் மக்கள்
/
ரேஷன் கடைகளில் தொடரும் ஊழியர்கள் பற்றாக்குறை அலைக்கழிக்கப்படும் மக்கள்
ரேஷன் கடைகளில் தொடரும் ஊழியர்கள் பற்றாக்குறை அலைக்கழிக்கப்படும் மக்கள்
ரேஷன் கடைகளில் தொடரும் ஊழியர்கள் பற்றாக்குறை அலைக்கழிக்கப்படும் மக்கள்
ADDED : ஜூலை 17, 2025 11:38 PM
விருதுநகர்: விருதுநகரில் உள்ள ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் ஒரு ஊழியர் இரு கடைகளை கூடுதல் பொறுப்போடு பார்க்கும் சூழல் உள்ளது. கடைகள் பல நேரங்களில் மூடிக் கிடக்கிறது. இதனால் மக்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது.
மாவட்டத்தில் 960 ரேஷன் கடைகள் உள்ளன. நகரங்களில் ஒரு ரேஷன் கடைக்கு 800 முதல் ஆயிரம் கார்டுகள், கிராமங்களில் ஒரு கடைக்கு 500 முதல் 800 கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுதாரர்களுக்கு எடைபோடவும், ரசீது வழங்கவும் விற்பனையாளர், எடை போடுவோர் என இரண்டு ஊழியர்கள் மட்டுமே இருக்க வேண்டும். மாவட்டத்தில் பல கடைகளில் எடை போடுபவரோ அல்லது விற்பனையாளரோ இல்லாத நிலை உள்ளது. இதனால் அருகே உள்ள கடைகளில் பணிபுரிவோர் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதனால் அரிசி, பருப்பு வாங்க வரும் மக்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது. பல நேரங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள சூழல் தான் உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும் கடைக்கு போனாலும் அந்த பொருள் இல்லை இந்த பொருள் இல்லை என ஊழியர்கள் கூறி விடுகின்றனர். இதனால் பலர் விரக்தியோடு வீடு திரும்புகின்றனர். கிராமப்புறங்களில் இந்த சிக்கல் அதிகளவில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தேவையான முனைப்பை காட்ட வேண்டும்.