/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'சாத்துார் நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படுமா' மக்கள் எதிர்பார்ப்பு
/
'சாத்துார் நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படுமா' மக்கள் எதிர்பார்ப்பு
'சாத்துார் நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படுமா' மக்கள் எதிர்பார்ப்பு
'சாத்துார் நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படுமா' மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 21, 2025 05:22 AM
சாத்துார்: சாத்துார் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்துார் நகராட்சி பகுதியை ஒட்டி வெங்கடாசலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஆர். நாயுடு நகர், ஹவுசிங் போர்டு காலனி, கே.கே. நகர் மேலும் படந்தால் ஊராட்சிக்குட்பட்டதென்றல் நகர் முத்துராமலிங்கபுரம், சத்திரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமீர் பாளையம் புதுப்பாளையம் நகர்கள் அமைந்துள்ளன. இந்த நகர்கள் ஊராட்சி எல்லைக்குள் உள்ளது. ஆனால் நகர் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதி மக்கள் பெரும்பாலும் சாத்துார் நகரில் இருந்து இடம்பெயர்ந்தவர்களே.
சாத்துார் நகராட்சியில் தற்போது 24 வார்டுகள் உள்ளது. நகராட்சியின் சுற்றளவு 3 கிலோமீட்டர் மட்டுமே உள்ளது.தொழில் வரி சொத்து வரி நுாலகவரி சாக்கடை வரி குப்பை வரி குடிநீர் வரி என பல்வேறு வரி இனங்கள் நகராட்சி விதித்த போதும் நகராட்சியின் வருவாய் அதிகரிக்கவில்லை.
நகரை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதன் மூலம் நகராட்சியின் வருவாய் அதிகரிக்கும் மேலும் நகர் ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளும் வேகமாக வளர்ச்சி வரும் இங்கு அடிப்படை வசதிகளையும் விரைவாக செய்து தர முடியும்.
இதன் காரணமாக கவுன்சிலர்கள் கூட்டத்தில் பலமுறை நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும் ஊராட்சி பகுதியில் உள்ள நகர்களை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் எனதீர்மானங்கள் நிறைவேற்றியும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நகராட்சி அடுத்த கட்ட வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நகராட்சி எல்லையை விரிவுப்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.