/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலெக்டர் அலுவலகத்தில் காற்றுக்கு சாயும் பேனர்கள் மக்கள் அச்சம்
/
கலெக்டர் அலுவலகத்தில் காற்றுக்கு சாயும் பேனர்கள் மக்கள் அச்சம்
கலெக்டர் அலுவலகத்தில் காற்றுக்கு சாயும் பேனர்கள் மக்கள் அச்சம்
கலெக்டர் அலுவலகத்தில் காற்றுக்கு சாயும் பேனர்கள் மக்கள் அச்சம்
ADDED : ஜூலை 13, 2025 12:12 AM

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காற்றுக்கு சாயும் பேனர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சிறு பேனர்கள் காற்றுக்கு சாய்ந்து விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனைகளை மக்கள் அதிகம் வந்து செல்லுமிடமான கலெக்டர் அலுவலகத்தில் பார்வைக்கு தெரியும் இடங்களில் வைத்துள்ளனர். ஒவ்வொரு துறையும் தனித்தனியாக வைத்துள்ளனர். இவை தவிர விழிப்புணர்வு பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பார்வைக்கு தெரிவதற்காக வாயில் ஆர்ச், நோ பார்க்கிங் போர்டு, வளாக சுற்றுச்சுவர்கள் என பல்வேறு பகுதிகளில் வைத்துள்ள இவை மாதக்கணக்கில் உள்ளன. பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால் அது எதுவும் இங்கு கடைபிடிக்கப்படாமல் உள்ளது. தற்போது காற்று காலம் என்பதால் இவை சாய்ந்து விபத்து ஏற்படுத்துகின்றன.
அங்கு பாதுகாப்புக்கு இருக்கும் போலீசாரும் கண்டுக் கொள்வதில்லை. விழிப்புணர்வுக்காக வைத்த பேனர்களை சரி செய்து வைக்க வேண்டும். தேவையற்ற வகையில் இடையூறு ஏற்படுத்தும் பேனர்களை அகற்ற வேண்டும்.