/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேவர்குளத்தில் தெரு நாய்களால் மக்கள் அச்சம்
/
தேவர்குளத்தில் தெரு நாய்களால் மக்கள் அச்சம்
ADDED : ஜூலை 31, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே தேவர்குளம் ஊராட்சி ஹவுசிங் போர்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன. இவைகள் ஒரு சில வெறி பிடித்து தெருவில் போவோர் வருவோரை கடித்து துன்புறுத்துகின்றது.
தெருவில் குழந்தைகள், சிறுவர்கள் விளையாட முடியவில்லை. இப்பகுதியில் உள்ள பள்ளி செல்லும் மாணவர்களையும் நாய்கள் விட்டு வைப்பதில்லை. டூவீலர்களில் செல்பவர்களை விரட்டும்போது அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
இப்பகுதியில் தெருவில், ரோட்டில் நடமாடுகின்ற நாய்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.