/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஹைமாஸ் விளக்கு எரியாததால் மக்கள் அவதி
/
ஹைமாஸ் விளக்கு எரியாததால் மக்கள் அவதி
ADDED : பிப் 02, 2025 04:03 AM
சாத்துார் : ஏழாயிரம் பண்ணையில் ஹைமாஸ் விளக்கு எரியாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஏழாயிரம் பண்ணை ஊராட்சி சுற்றியுள்ள 18 பட்டி கிராமங்களுக்கு தாய் கிராமமாக உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரமாக பராசக்தி மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள பஜார் பகுதியில் ஹைமாஸ் விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பஜார் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
கடைகளின் முகப்பு பகுதியில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் மக்கள் நடமாடும் நிலை உள்ளது. இந்தப் பகுதியில் எப்போதும் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும். இங்கு இரவு நேரத்தில் விளக்கு எறியாமல் இருள் சூழ்ந்து இருப்பதால் வியாபாரிகளும் மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஹைமாஸ் விளக்கில் உள்ள பழுதை நீக்கி இரவு நேரத்தில் விளக்கு எரிய ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.