/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் ரோடு சேதத்தால் மக்கள் அவதி
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் ரோடு சேதத்தால் மக்கள் அவதி
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் ரோடு சேதத்தால் மக்கள் அவதி
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் ரோடு சேதத்தால் மக்கள் அவதி
ADDED : ஜன 15, 2024 04:55 AM

சிவகாசி, : சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கிலிருந்து சித்துராஜபுரம் ரோட்டில் குழாய் உடைந்து 6 மாதமாக குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கிலிருந்து சித்துராஜபுரம் செல்லும் ரோட்டில் அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இங்கு குடிநீர் வினியோகம் செய்யும் போதெல்லாம் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகின்றது.
அடிக்கடி குழாய் உடைந்து தண்ணீர் ரோட்டில் ஓடியதால் அந்த இடத்தில் ரோடு சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. குடிநீர் வீணாவதோடு, ரோடும் சேதமடைந்து விட்டதால் போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்படுகிறது. இந்த ரோட்டில் வருகின்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
தவிர குழாய் உடைந்த இடத்தில் அருகிலேயே சிலர் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். இதன் கழிவுகளும் வெளியேறி தண்ணீரில் கலந்து துர்நாற்றம் ஏற்படுகின்றது. எனவே இங்கு உடைந்த குழாயினை சரி செய்வதோடு ரோட்டினையும் சீரமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.