/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் மக்கள் அவதி
/
சிவகாசியில் ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் மக்கள் அவதி
சிவகாசியில் ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் மக்கள் அவதி
சிவகாசியில் ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் மக்கள் அவதி
ADDED : மே 09, 2025 01:16 AM

சிவகாசி: சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் வேலாயுத ரஸ்தா ரோடு முக்கிய மாற்றுப் பாதையாக உள்ளது. தவிர அரசு மருத்துவமனை, மாநகராட்சி அலுவலகம், ரயில்வே ஸ்டேஷனிற்கு இந்த ரோட்டில் தான் சென்று வர வேண்டும். மேலும் பள்ளி கல்லுாரி பஸ்களும் இதே ரோட்டில் சென்று வருகின்றன.
இந்நிலையில் வேலாயுத ரஸ்தா ரோட்டில் இருபுறமும் கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இப்பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கனரக வாகனங்களையும் நிறுத்தி வைக்கப்படுவதால் ரோடு குறுகிய நிலையில் போக்குவரத்திற்கு பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.
இதனால் அவசரத்திற்கு வருகின்ற ஆம்புலன்ஸ் வாகனமும் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தவிர அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப் படுவதோடு விபத்தும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் ரோட்டோரத்தில் கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.