/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
40 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் இல்லை : மக்கள் அவதி
/
40 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் இல்லை : மக்கள் அவதி
40 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் இல்லை : மக்கள் அவதி
40 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் இல்லை : மக்கள் அவதி
ADDED : நவ 10, 2025 12:40 AM

சிவகாசி: சிவகாசி பிச்சாண்டி தெருவில் மாநகராட்சி சார்பில் இதுவரையிலும் குழாய் பதிக்கப்படாததால் 40 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் இல்லை. மாநகராட்சி வாகனம் மூலம் 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிற குடிநீர் போதாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி பிச்சாண்டி தெரு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி உருவாகி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இதுவரையிலும் மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு என குழாய் பதிக்கப்படவில்லை. இதனால் குடிநீருக்காக பல ஆண்டுகளாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது மாநகராட்சி வாகனம் மூலமாக 10 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இது அனைவருக்கும் போதுமானதாக இல்லாத நிலையில் குடிநீர் வாகனம் வரும்போதெல்லாம் குடிநீருக்காக சண்டை சச்சரவு ஏற்படுகின்றது. இதனால் கூலி வேலை செய்யும் இப்பகுதி மக்கள் வேறு வழியேயின்றி குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். தவிர அதற்கும் வழி இல்லாதவர்கள் அருகில் உள்ள வார்டிற்குச் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர்.
எனவே மாநகராட்சி சார்பில் உடனடியாக குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

