/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோரத்தில் செப்டிக் டேங்க் கழிவு நீர் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
/
ரோட்டோரத்தில் செப்டிக் டேங்க் கழிவு நீர் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
ரோட்டோரத்தில் செப்டிக் டேங்க் கழிவு நீர் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
ரோட்டோரத்தில் செப்டிக் டேங்க் கழிவு நீர் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
ADDED : அக் 25, 2025 03:47 AM
காரியாபட்டி: காரியாபட்டி அருகே மதுரை-தூத்துக்குடி 4 வழி சாலை ஓரத்தில் செப்டிக் டேங்க் கழிவு நீரை திறந்து விடுவதால், துர்நாற்றம் ஏற்பட்டு முகம் சுளிக்கின்றனர். இச்செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பகுதியில் செப்டிக் டேங்கை தூய்மைப்படுத்தும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் 2, 3 வாகனங்களில் செப்டிக் டேங்க் கழிவு நீரை எடுத்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாக திறந்து விட்டு வந்தனர். எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. நாளடைவில் தொழில் போட்டி ஏற்பட்டு, குறைந்த கூலிக்கு கூட கழிவு நீரை அப்புறப்படுத்த சிலர் முன் வருகின்றனர். அது போன்ற சமயங்களில் நீண்ட தூரம் சென்று கழிவு நீரை திறந்து விடுவதற்கு பதிலாக அருகிலே , ஊரை ஒட்டியே ரோட்டோரத்தில் திறந்து விட்டு, டீசல் செலவை சரி கட்டுகின்றனர்.
காரியாபட்டி கரிசல்குளம் அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை ரோட்டோரத்தில் கழிவு நீரை வாய்க்காலில் திறந்து விடுகின்றனர். அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் முகம் சுளிக்கின்றனர். மேலும் மழை நீருடன் கலந்து ஊருணி, கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கிறது. நீர் மாசுபட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை கண்காணித்து, இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

