/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பல்கலை விளையாட்டு போட்டி ரமணாஸ் கல்லுாரி சாதனை
/
பல்கலை விளையாட்டு போட்டி ரமணாஸ் கல்லுாரி சாதனை
ADDED : அக் 25, 2025 03:47 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை , அறிவியல் கல்லூரி மாணவிகள் பல்கலை அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மதுரை காமராஜ் பல்கலை நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் மாணவி யாழினி முதலிடம் பெற்று பதக்கம் வென்றார்.
மாணவி குபேர லட்சுமி பளு தூக்கும் போட்டியில் 2 ம் இடம் பெற்றார். தமிழ்நாடு அளவில் நடந்த முதல்வர் கால்பந்து போட்டியில் மாணவிகள் சுப ஸ்தலா, தேன்மொழி விருதுநகர் அணிக்கு விளையாடி வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், செயலாளர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், போக்குவரத்துச் செயலர் விக்னேஷ், முதல்வர் தில்லைநடராஜன், உடற் கல்வி பேராசிரியர் சந்தானஈஸ்வரி வாழ்த்தினர்.

