/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏழு ஆண்டுகளாக குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தி
/
ஏழு ஆண்டுகளாக குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தி
ஏழு ஆண்டுகளாக குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தி
ஏழு ஆண்டுகளாக குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தி
ADDED : அக் 31, 2024 01:08 AM

சிவகாசி: சிவகாசி அண்ணாதுரை மார்க்கெட் பின்புறம் தெருவில் 7 ஆண்டுகளாக குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி சார்பில் மேல்நிலைகுடிநீர் தொட்டியில் இருந்து சேர்மன் சேர்மன் சண்முகம் நாடார் ரோடு, மார்க்கெட் பின்புறம் உள்ள தெருக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இப்பகுதியில் குடியிருப்புகள் மட்டும் இன்றி அதிகமான கடைகளும் உள்ளன.
இந்நிலையில் மார்க்கெட் பின்புறம் உள்ள தெருவில் ஏழு ஆண்டாக குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகின்றது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வருகின்ற மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வாகனங்கள் செல்லும்போது தண்ணீர் அடிக்கப்பட்டு கடைகளுக்குள் தெறிக்கின்றது.
எனவே உடனடியாக இப்பகுதியில் சேதமடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவது தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.