/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் உடைந்து கசியும் நீரை சேகரிக்கும் மக்கள்
/
குழாய் உடைந்து கசியும் நீரை சேகரிக்கும் மக்கள்
ADDED : ஜன 09, 2024 12:44 AM

சிவகாசி, : வெம்பக்கோட்டை ஒன்றியம் குண்டாயிருப்பு காலனி பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லாததால் குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீரை மக்கள் குடிப்பதற்கு சேகரிக்கின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் குண்டாயிருப்பு காலனியில் நுாறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியினருக்கு புழக்கத்திற்காக தண்ணீர் வினியோகம் செய்வதற்கு மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது.
ஆனால் குடிநீர் வினியோகம் இல்லை. இந்நிலையில் குண்டாயிருப்பு பஸ் ஸ்டாப் வழியாக செல்லும் குழாய் உடைந்து குடிநீர் கசிந்து வெளியேறுகின்றது. இதனை இப்பகுதியினர் குடிப்பதற்காக சேகரிக்கின்றனர். கசியும் தண்ணீரும் இல்லை என்றால் இவர்களுக்கு வேறு குடிநீர் வசதி இல்லை. எனவே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.