/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குற்றங்களை தடுக்க தேவை அவுட் போலீஸ் ஸ்டேஷன்கள்; வத்திராயிருப்பு மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : அக் 09, 2025 05:52 AM
வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டதால் புதுப்பட்டி கோட்டையூர், சுந்தரபாண்டியம் பகுதிகளில் அவுட் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து தனி தாலுகாவாக வத்திராயிருப்பு உருவாக்கப்பட்ட பிறகு பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வத்திராயிருப்பை இன்ஸ்பெக்டர் அந்தஸ்து தலைமையிடமாகக் கொண்டு கூமாபட்டி, நத்தம் பட்டி போலீஸ் ஸ்டேஷன்களும், தனியாக
கிருஷ்ணன்கோவில் போலீஸ் ஸ்டேஷனும் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் நத்தம்பட்டி, கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷன்களும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்து தரம் உயர்த்தப்பட்டு புதிய இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த 4 போலீஸ் ஸ்டேஷன்களில் 2 முதல் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தகைய சப்-இன்ஸ்பெக்டர்களை கொண்டு தேவையான போலீஸ்காரர்களை நியமித்து புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், கோட்டையூர் பகுதிகளில் அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைத்து குற்ற செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.