ADDED : அக் 09, 2025 05:53 AM
விருதுநகர் : காங். எஸ்.சி., துறை மாநில பொதுச்செயலாளர் எட்வர்ட், கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்த மனு: விருதுநகர் ரோசல்பட்டி அண்ணாநகரில் 5.78 ஏக்கர் புன்செய் நிலம், அங்கு வசிக்கும் எஸ்.சி., மக்களுக்கு 1979ல் வழங்கப்பட்டது. நுாறு பேர் பயனடைந்தனர்.
இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக பட்டா வழங்கப்பட்ட இடத்தில் பட்டா பெற்ற பயனாளிகள் அனைவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசிக்கின்றனர். ஆனால் இந்த நிலம் தற்போது வரை வருவாய்த்துறை பதிவேடுகளில் ஆதிதிராவிடர் நத்தம் என வகை மாற்றம் செய்யப்படாமல், அரசு நிலம் என்றே இருந்து வருகிறது.
இதனால் பட்டா பெற்ற பயனாளிகளின் வாரிசுதாரர்கள் இந்த இடத்திற்கான பட்டாவை தங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய இயலாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஆதிதிராவிடர் நத்தம் பட்டா என வகைமாற்றம் செய்து இ-பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.