/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துாக்கி வீசப்பட்ட தேசிய கொடி வேதனையில் மக்கள்
/
துாக்கி வீசப்பட்ட தேசிய கொடி வேதனையில் மக்கள்
ADDED : ஜன 29, 2025 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே தேசிய கொடியை வேலியில் யாரோ துாக்கி எறிந்து அவமரியாதை செய்தது மக்களை வேதனையடைய செய்துள்ளது.
அருப்புக்கோட்டை அருகே எம். ரெட்டிய பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது.
இதன் அருகே உள்ள கம்பி வேலியில் தேசிய கொடி பல நாட்களாக தொங்கி கொண்டு உள்ளது. யாரோ கொடியை வீசி உள்ளனர்.
பல நாட்களாக கீழே கிடந்த நிலையில், நேற்று யாரோ ஒருவர் கொடியை எடுத்து அருகில் இருந்த கம்பி வேலி தொங்கவிட்டு சென்றுள்ளார்.
இந்தப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, கடைகள் இருந்தும் கீழே கிடந்த தேசிய கொடியை எடுக்க யாருக்கும் மனம் வராதது வேதனையளிக்கிறது.

