/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பராமரிப்பற்ற வளாகம், துவங்காத சமுதாயக்கூட பணிகள் ராஜபாளையம் -நக்கனேரி ஊராட்சியில் மக்கள் தவிப்பு

ADDED : ஜன 21, 2025 05:28 AM

ராஜபாளையம்: வாறுகால் ஓடையில் குவிந்திருக்கும் கழிவுகள், செயல்படாத திடக்கழிவு மேலாண்மை உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு நக்கனேரி ஊராட்சியில் மக்கள் தீர்வை எதிர்பார்த்து உள்ளனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் நக்கனேரி ஊராட்சியில் தனி கிராமமாக 42 தெருக்களுடன் 3600க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சியில் போதுமான துாய்மை பணியாளர்கள் இல்லை. அனைத்து தெருக்களும் சுற்றி வருவதற்குள் கழிவுகள் தேக்கம் அடைகிறது.
குப்பைகள் ஊருக்கு ஒதுக்குப்புறம் ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனர். மொத்தமாக சேர்ந்ததும் தீ வைத்து எரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை காட்சி பொருளாக மாற்றப்பட்டுள்ளது. குடியிருப்பு கழிவு நீர் வெளியேறும் உறிஞ்சிக் குழாய் அமைப்பும் செயல்படாமல் நேரடியாக நீர் நிலையில் விட்டுள்ளதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக நுாலகத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருவதால் இளைஞர்களுக்கான வாசிப்பு வாய்ப்பு இல்லாமல் உள்ளது.