/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீரால் நோய் அபாயம், குண்டு குழி ரோடால் விபத்து திருச்சுழி நாடாகுளம் கிராம மக்கள் அவதி

ADDED : டிச 27, 2024 04:34 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே நாடாகுளம் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பல ஆண்டுகளாக மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பல்லி மடம் ஊராட்சிக்கு உட்பட்டது நாடாகுளம். இங்கு ரோடு, குடிநீர், மின்விளக்கு, வாறுகால் என எந்தவித வசதிகளும் இன்றி சிரமத்தில் உள்ளனர். குடிநீர் வசதி இல்லாததால் கிராமத்திற்கு வெளியே உள்ள கிணற்றில் தண்ணீர் இரைத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த கிணறும் மாசு அடைந்து தண்ணீரை குடிக்க முடியாத அளவிற்கு உள்ளது.
வேறு வழியின்றி அதைத்தான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
ஊராட்சி மூலம் கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி தண்ணீர் வராமல் பயன்பாடு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் பயனின்றி சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது.
கிராமத்திற்கு வரும் ரோடு குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால் கிராமத்திற்கு பஸ்கள் வருவது இல்லை. 2 கி.மீ., தூரமுள்ள மெயின் ரோட்டிற்கு நடந்து சென்று பஸ்கள் ஏற வேண்டி உள்ளது.
மயானம் இல்லாததால் இறந்தவர்களை வயல்வெளி பகுதியில் திறந்த வெளியில் மேலான பகுதியில் வைத்து எரியூட்டும் நிலை உள்ளது.