/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிரஷர் நிறுவனத்திற்காக ஓடையில் பாதை அமைக்க மக்கள் எதிர்ப்பு
/
கிரஷர் நிறுவனத்திற்காக ஓடையில் பாதை அமைக்க மக்கள் எதிர்ப்பு
கிரஷர் நிறுவனத்திற்காக ஓடையில் பாதை அமைக்க மக்கள் எதிர்ப்பு
கிரஷர் நிறுவனத்திற்காக ஓடையில் பாதை அமைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 12, 2025 04:19 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கிரஷர் நிறுவனத்திற்காக ஓடையில் பாதை அமைப்பதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தனர்.
அருப்புக்கோட்டை அருகே கீழ கண்டமங்கலம், ஒத்தவீடு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளான ஓடைகளை அளவீடு செய்து அதில் தனியார் கிரஷர் நிறுவனம் அமைக்கவும் அதற்கான பாதைக்காக அளவீடு செய்வதாக மக்களுக்கு திருச்சுழி தாசில்தார் அலுவலகத்தில்இருந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்த ஓடை சித்தலகுண்டு கண்மாயில் நீர் பெருகி, கிராமங்களின் வழியாக செல்லும் ஓடை வழியாக திருச்சுழி பெரிய கண்மாய்க்கு மழை நீர் சென்றடையும். இந்த ஓடையை நாங்கள் ஓடையாக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இதில் பாதை அமைத்தால் விவசாயம் அழிந்து விடும்.
மேலும் கனரக வாகனங்கள் சென்றால் தூசிகள் ஏற்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். ஓடையில் பாதை அமைக்க அளவீடு செய்யக்கூடாது என தங்கள் மனுவில் கூறியுள்ளனர். மனுவை ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.