/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூமாபட்டியில் மதுக்கடை திறக்க மக்கள் எதிர்ப்பு
/
கூமாபட்டியில் மதுக்கடை திறக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 31, 2024 12:07 AM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டி ராமசாமியாபுரத்தில் மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் மதுக்கடை திறக்க இரண்டு முறை டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால், மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் டாஸ்மாக் நிர்வாகம் பின் வாங்கியது. மதுக்கடை திறந்தால் வீண் தகராறுகள், சாதி மோதல்கள் ஏற்படும் என போலீஸ் தரப்பிலும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது.
இருந்த போதிலும் அங்கு மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. நேற்று மதுக்கடை திறக்க உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இப்பகுதியில் தினந்தோறும் தகராறுகள் ஏற்பட்டு வரும் நிலையில் மதுக்கடை திறப்பது, தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.