/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விரட்டி கடிக்கும் நாய்கள் அலறி ஓடும் மக்கள்
/
விரட்டி கடிக்கும் நாய்கள் அலறி ஓடும் மக்கள்
ADDED : ஆக 18, 2025 03:19 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், மக்கள் பயந்து அலறி ஓடுகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளின் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த எந்தவித கட்டுப்பாடு இல்லாததால் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. பள்ளி செல்லும் மாணவர்களை விரட்டி கடிக்கின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மணி நகரத்தில் சண்முகநாதபுரம் மேலத்தெரு பூ மார்க்கெட் பின்புறம் தெருவில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிந்து மக்களை விரட்டுகிறது.
டெலிபோன் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், தெற்கு தெரு சொக்கலிங்கபுரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. தெருக்களில் பெண்கள் பயந்து கொண்டே செல்ல வேண்டியுள்ளது. நகராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

