/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாயில்பட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் செல்லும் பஸ்களால் மக்கள் அவதி
/
தாயில்பட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் செல்லும் பஸ்களால் மக்கள் அவதி
தாயில்பட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் செல்லும் பஸ்களால் மக்கள் அவதி
தாயில்பட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் செல்லும் பஸ்களால் மக்கள் அவதி
ADDED : நவ 17, 2024 05:35 AM
சாத்துார்: சாத்துார் அருகே தாயில் பட்டியில் அரசு ,தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் செல்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தாயில்பட்டிஊராட்சி வெம்பக் கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சி இப் பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு தாய் கிராமமாக உள்ளது. சுற்றுக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாயில்பட்டியில் பொருட்கள் வாங்கிச் சென்று விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.
தாயில் பட்டியில் இருந்து ஏராளமானோர் வெளியூருக்குச் சென்று பணிபுரிந்தும் வருகின்றனர். தாயில் பட்டியில் பல ஆண்டுகளாக பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது பஸ் ஸ்டாண்ட் காட்சி பொருளாக உள்ளது. இங்கு பயணிகள் நிழற்குடை வசதி இருந்த போதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மெயின் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.தாயில்பட்டி பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்வது கிடையாது.இதனால் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளுக்கு வியாபாரம் குறைந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
ரோட்டில் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து பயணிகள் பஸ் ஏறி செல்கின்றனர். தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சாலை ஓரத்தில் மக்கள் காத்து நிற்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாயில்பட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.