/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பில் போக்குவரத்து நெருக்கடி தவிப்பில் மக்கள்
/
வத்திராயிருப்பில் போக்குவரத்து நெருக்கடி தவிப்பில் மக்கள்
வத்திராயிருப்பில் போக்குவரத்து நெருக்கடி தவிப்பில் மக்கள்
வத்திராயிருப்பில் போக்குவரத்து நெருக்கடி தவிப்பில் மக்கள்
ADDED : ஜன 21, 2025 05:24 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதாலும் பஸ்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடிக்கு  மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. இதனை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வத்திராயிருப்பின் மிக முக்கிய பகுதியான முத்தாலம்மன் பஜாரில்  அதிகளவு வாகன போக்குவரத்து சந்திப்பு பகுதியாக விளங்குகிறது. இங்கிருந்து அழகாபுரி, கூமாபட்டி வழித்தடங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கிறது.
இந்நிலையில் பஜார் வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும்,  வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதாலும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் வரும்போது மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.  அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்கள்  கூட  எளிதாக வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே முத்தாலம்மன் பஜாரில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தியும்,  ஆக்கிரமிப்புகளை  அகற்றியும் எளிதில் வாகனங்கள் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

