/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆதார் அட்டையில் திருத்தத்திற்கு ராஜபாளையத்தில் குவியும் மக்கள்
/
ஆதார் அட்டையில் திருத்தத்திற்கு ராஜபாளையத்தில் குவியும் மக்கள்
ஆதார் அட்டையில் திருத்தத்திற்கு ராஜபாளையத்தில் குவியும் மக்கள்
ஆதார் அட்டையில் திருத்தத்திற்கு ராஜபாளையத்தில் குவியும் மக்கள்
ADDED : மார் 15, 2024 06:27 AM

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ஆதார் கார்டு திருத்த மையங்களில் குவியும் மக்கள் கூட்டங்களால் திருத்த வழியின்றி ஏமாற்றத்துடன் திரும்புவதை தடுக்க மாற்று ஏற்பாடு செய்ய மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பள்ளிகளில் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே உள்ள ஆதார் அட்டைகளில் பள்ளி மாணவர்களுக்கான ஆதார் அட்டைகளில் படங்களை புதுப்பிப்பது, பெயர் திருத்தம், முகவரி மாற்ற பணிகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே இ- சேவை மையங்களில் சர்வீஸ் சென்டர்களில் நடந்து வந்த இப்பணிகள் தாலுகா அலுவலகம், நகராட்சி, தபால் அலுவலகங்கள், குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டன.
தற்போது பள்ளி மாணவர்கள் தங்கள் பதிவுகளை புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளும் போது பெரும்பாலான வங்கிகளில் இச்சேவைகள் நடைமுறையில் இல்லை.
இதனால் தாலுகா அலுவலகங்கள், போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே குவிந்து கிடந்து சிலநேரங்ளில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி கல்லுாரி மாணவர்கள் பல்வேறு தேவைகளுக்காக அவர்கள் படிக்கும் இடங்களிலேயே ஆதார் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்வதுடன், உள்ளாட்சி நிர்வாகங்கள் மக்கள் சிரமத்தை குறைக்க உள்ளாட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

