/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை மரத்தில் -கட்டி வைத்த மக்கள்
/
வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை மரத்தில் -கட்டி வைத்த மக்கள்
வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை மரத்தில் -கட்டி வைத்த மக்கள்
வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை மரத்தில் -கட்டி வைத்த மக்கள்
ADDED : மார் 20, 2024 12:05 AM

சத்திரப்பட்டி : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளி வீட்டுக்குள் திருட முயன்ற கருப்பசாமி 26, என்பவரை கிராமத்தில் மரத்தில் கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சத்திரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுக கடவுள். மனைவி பேச்சியம்மாள். பேண்டேஜ் கம்பெனி தொழிலாளர்கள். மகன்கள் இருவரும் மதியம் உணவிற்கு பின் பள்ளி சென்றதும் பேச்சியம்மாள் வேலைக்கு சென்று விட்டார். நேற்று மாலை 4:00 மணிக்கு ஆறுமுகக்கடவுள் வீட்டுக்கு வந்த போது வழக்கமாக வைக்கும் இடத்தில் வீட்டின் சாவி காணவில்லை.
கதவு திறந்திருந்தது தெரிந்து வீட்டுக்குள் பார்த்தபோது பீரோ, அலமாரி திறந்து வாலிபர் ஒருவர் திருட முயன்றது தெரிந்தது.
உடனே சத்தமிட்டதில் அக்கம் பக்கத்தினர் தப்ப முயன்ற வாலிபரை பிடித்து அருகிலுள்ள மரத்தில் கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில் அய்யனாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி 26, மது அருந்த பணம் இன்றி சுற்றியபோது வீட்டின் சாவி இருப்பதை கண்டு திருட முயன்றது தெரிந்தது. கீழ ராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.