/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல்லில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைந்ததால் மறியலுக்கு முயன்ற மக்கள்

ADDED : ஜன 24, 2025 04:14 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கே.கே. நகரில் குடிநீர் தொட்டி உடைந்த நிலையில், மக்கள் அடிப்படை வசதி வேண்டி ரோடு மறியலில் ஈடுபட முயன்றனர். கமிஷனர் பேச்சு வார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் 19, 20, 21, 22 வார்டுகளில் கேகே நகர், கண்ணகி காலனி, சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இப்பகுதியில் குடிநீர் ரோடு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. கே.கே. நகரில் குடிநீருக்காக போர்வெல்லுடன் கூடிய மேல்நிலை நீர்த் தேக்க பிளாஸ்டிக் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று தண்ணீர் நிரம்பியவுடன் பாரம் தாங்காமல் தொட்டி உடைந்து சிதறியது.
ஆத்திரமடைந்த கேகே நகர், கண்ணகி காலனி, சத்யா நகர் பகுதி மக்கள் சிவகாசி திருத்தங்கல் ரோட்டில் மறியலில் ஈடுபட வந்தனர். போலீசார் மறியல் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அங்கு வந்த கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மக்கள் அவர்களிடம், எங்கள் பகுதியில் வாறுகால் துார்வார வில்லை, ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை என வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி,அவர்களிடம் அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.