/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
30 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி கசியும் நீரை சேகரிக்கும் மக்கள்
/
30 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி கசியும் நீரை சேகரிக்கும் மக்கள்
30 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி கசியும் நீரை சேகரிக்கும் மக்கள்
30 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி கசியும் நீரை சேகரிக்கும் மக்கள்
ADDED : ஆக 15, 2025 02:21 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் அப்பையன் பட்டி ஊராட்சி அம்மையார் பட்டி, சக்கம்மாள் புரத்தில் 30 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து கசியும் தண்ணீரை சேகரித்து குடிக்க பயன்படுத்துகின்றனர்.
புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாத நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு தொட்டி கட்டப்பட்டு உள்ளூர் போர்வெல் மூலமாக புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றது. ஆனால் இதுநாள் வரையிலும் குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடம் ரூ. 12 என விலைக்கு வாங்கித் தான் பயன்படுத்துகின்றனர்.
மேலும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவல்பட்டி சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். சங்கரன்கோவில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டு அம்மையார் பட்டி வழியாக செல்கிறது. இந்த குழாயில் லேசாக கசிவு ஏற்பட்டு குடிநீர் வெளியே வருகின்றது. இதனை அம்மையார்பட்டி, சக்கம்மாள்புரம் பகுதி மக்கள் குடிப்பதற்காக சேகரிக்கின்றனர்.
ஒரு குடம் சேகரிக்க 30 நிமிடம் வரை ஆகின்றது. வேறு வழி என்று மக்கள் பொறுமையாக தண்ணீரை எடுக்கின்றனர். எனவே இப்பகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.