ADDED : ஜன 30, 2025 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில்  மக்கள் சேவை மையத்தின் 21வது ஆண்டு துவக்க விழா நடந்தது.  தலைவர் திருமூர்த்தி தலைமை வகித்தார்.
துணைத் தலைவர்கள் பாலசுப்ரமணியன், மாணிக்கம், இணை செயலாளர் திருப்பதி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சுரேஷ் தளியத் வரவேற்றார். நகராட்சி தலைவர் ரவிக் கண்ணன்,  டாக்டர் சிதம்பரநாதன்,  வனச்சரகர் மனோரஞ்சிதம் பேசினர்.  பல்வேறு  பிரிவுகளில் சிறந்து விளங்கிய சமூக ஆர்வலர்கள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயல் தலைவர் பாலகிருஷ்ணன்,  நிர்வாகிகள் செய்திருந்தனர்.  பொருளாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.

