ADDED : செப் 23, 2024 05:05 AM
விருதுநகர் : விருதுநகரில் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனான பணித் திறன் ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களில் சாத்துார் லோகநாதன் முதல் பரிசும், சிவகாசி வடிவேல் 2ம் பரிசும், திருச்சுழி பாண்டிசங்கரர்ராஜ் 3ம் பரிசும், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்களில் திருச்சுழி பழனிச்சாமி முதல் பரிசும், வத்திராயிருப்பு ராமநாதன் 2ம் பரிசும், வெம்பக்கோட்டை
கிருஷ்ணவேணி 3ம் பரிசும், முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை தாசில்தார்களில் சுந்தரபாரதி முதல் பரிசும், திருச்சுழி ராஜாராம் பாண்டியன் 2ம் பரிசும், அருப்புக்கோட்டை பிரின்ஸ் ரஞ்சித்சிங், ஜெயராஜ் ஆகியோர் 3ம் பரிசும், உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளிவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் சாத்துார் மாரிமுத்து முதல் பரிசும், திருச்சுழி சுப்புரத்தினம் , வத்திராயிருப்பு செல்வி ஆகியோர் 2ம் பரிசும், விருதுநகர் அரவிந்தன் 3ம் பரிசும், பெற்றனர். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா உடனிருந்தனர்.