/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெரியவள்ளிக்குளம் ஊருணியை துார்வாரி, வேலி அமைக்க எதிர்பார்ப்பு
/
பெரியவள்ளிக்குளம் ஊருணியை துார்வாரி, வேலி அமைக்க எதிர்பார்ப்பு
பெரியவள்ளிக்குளம் ஊருணியை துார்வாரி, வேலி அமைக்க எதிர்பார்ப்பு
பெரியவள்ளிக்குளம் ஊருணியை துார்வாரி, வேலி அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 18, 2024 06:49 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் ஊருணியை மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு துார்வாரி, குப்பை கொட்டுவதை தடுக்க வேலி அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் ஊருணிக்கு நீர்வரத்து ஓடைகள் மூலம் மழைக்காலத்தில் நீர் வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் தற்போது ஊருணியில் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதை சுற்றியுள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் ஊருணி கரையில் குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால் தேங்கும் மழை நீரும் மாசடைந்து பச்சை நிறத்தில் மாறி கழிவு நீராக மாறியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்வளம், மண்வளம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கான நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. எனவே பெரியவள்ளிக்குளம் ஊருணியை துார்வாரி, வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.