/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் நிரந்தர லேப் டெக்னீசியன்கள் தேவை
/
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் நிரந்தர லேப் டெக்னீசியன்கள் தேவை
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் நிரந்தர லேப் டெக்னீசியன்கள் தேவை
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் நிரந்தர லேப் டெக்னீசியன்கள் தேவை
ADDED : டிச 01, 2024 02:30 AM
விருதுநகர்:தமிழகத்தில் உள்ள 11 புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் உள்ள 440 லேப் டெக்னீசியன் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் 2022 ஜன. 12 முதல் செயல் படுகிறது.
ஒரு மருத்துவக்கல்லுாரிக்கு 35 முதல் 40 லேப்டெக்னீசியன்கள் தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் காலியாக உள்ள மருந்தாளுனர்கள், செவிலியர்கள், நுண்கதிர் சிகிச்சை பிரிவு ஊழியர்கள் நிரந்தர பணியிடங்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் படுகின்றனர். படிப்பை முடித்து பல ஆண்டுகளாக அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவற்றில் தற்போது பணியாற்றுபவர்கள் தங்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற எண்ணத்தில் விடுப்பு, எவ்வித பணப்பலன்களும் இன்றி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். எனவே லேப் டெக்னீசியன் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.