ADDED : பிப் 09, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு நாளை (பிப்.10) முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் பிப். 13 வரை தினமும் காலை 6:30 முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இரவில் தங்க அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வரக்கூடாது என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.