ADDED : ஏப் 12, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : மல்லாங்கிணரில் சென்ன கேசவ பெருமாள் கோயில் பங்குனி திரு விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
மல்லாங்கிணரில் செங்கமலத்தாயார் சென்ன கேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழா சென்ற ஏப்.3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து செங்கமலத்தாயார் சென்ன கேசவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, ரிஷப, சேஷ, சிம்ம, கருடாழ்வார் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பெருமாள், செங்கமலத்தாயார் திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முக்கிய வீதி வழியாக சென்று, நிலைக்கு வந்தடைந்தது.