நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பட்டா வீடுகோரி நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார்குளம் மொட்டமலைய சேர்ந்த பூங்கொடி, கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: நாங்கள் குடியிருக்க சரியான வீடு வசதி இல்லை. அதனால் இலவச பட்டா வீடு திட்டத்திற்கு மனு அளித்தும் சரியான நடவடிக்கை இல்லை. எங்கள் கோரிக்கையை ஏற்று இலவச பட்டா வீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும், என்றார்.