
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் தேர்தல் நன்னடத்தை விதி அமலானதால் குறைதீர்க் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மக்கள் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.
மார்ச் 16ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமுதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதன்படி விருதுநகரில் குறைதீர்க் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் மக்கள் வழக்கம் போல் இன்று குறைதீர்க் கூட்டம் நடக்கும் என கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு வந்த பின் அதிகாரிகள் வழிகாட்டுதல் படி உள்ளே வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர். இம்மனுக்களை பிரித்து அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்டும்.

