/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாவாலி ரோட்டில் மருந்து கழிவுகள் எரிப்பு
/
பாவாலி ரோட்டில் மருந்து கழிவுகள் எரிப்பு
ADDED : செப் 29, 2024 05:59 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே பாவாலி ரோடு ஓரங்களில் மருந்து கழிவுகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி வருகின்றனர்.
விருதுநகர் நான்கு வழிச்சாலை வழியாக பாவாலி செல்லும் ரோட்டின் ஓரங்களில் ஆலைகள், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகழிவுகளை முறையாக அகற்றாமல் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.
இதனால் ரோட்டின் ஓரங்களில் உள்ள மரங்கள், மண்வளம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுகளை அகற்ற தயங்குபவர்கள் குப்பையோடு குப்பையாக தீயீட்டு எரிக்கின்றனர். இதில் இருந்து வெளியேறும் புகையை சுவாசிக்க முடியாமல் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது போன்ற செயல்களை தடுக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சமூக விரோதிகள் தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.