/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருந்தாளுனர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
/
மருந்தாளுனர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி
ADDED : ஜூன் 28, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருந்தாளுனர்களில் 200க்கும் மேற்பட்டோர் காலிப்பணியிடங்களை நிரப்புதல், 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களை பணிவரன் முறை செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத் தலைவர், நான்கு துறை இயக்கனர்களுக்கும் மாவட்டத்தில் இருந்து மருந்தாளுனர்கள் கோரிக்கை முறையீடு அனுப்பினார்கள்.