ADDED : ஜூலை 01, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் முதுநிலை, இயற்பியல் ஆராய்ச்சி துறை சார்பில் இயற்பியல் சங்கத்தின் துவக்க விழாவை முன்னிட்டு வரம்பிற்கு அப்பால் என்ற தலைப்பில் இயற்பியல் சொற்பொழிவு நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். மாணவி ஜெகதீஸ்வரி வரவேற்றார். கல்லுாரி முன்னாள் இயற்பியல் துறை தலைவர் சிவா தேவி பேசினார். 74 மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். மாணவி செல்வி நன்றி கூறினார். மாணவி சியாமளா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.