ADDED : நவ 20, 2024 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் கூரைக்குண்டு ரோடு பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.
விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சி பகுதியில் குப்பை பாயின்ட்களை அதிகரித்துள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அகற்றப்பட்டாலும் மக்கள் தெருவோரங்களில் குப்பையை கொட்டுவது அதிகரித்து வருகிறது. சாப்பாட்டு கழிவுகளை கொட்டுவதாலும் அவற்றை உண்ண வரும் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே சுற்றித்திரியும் பன்றிகளால் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குப்பையை குடியிருப்பு பகுதி வரை விரவி விடுகின்றன. குப்பை பாயின்ட்களை ஒழிப்பதோடு, பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.