/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வறண்ட நீர்நிலைகளில் மதுபாட்டில்கள் குவியல் மழைக்காலம் வந்தால் பேராபத்து காத்திருக்கு
/
வறண்ட நீர்நிலைகளில் மதுபாட்டில்கள் குவியல் மழைக்காலம் வந்தால் பேராபத்து காத்திருக்கு
வறண்ட நீர்நிலைகளில் மதுபாட்டில்கள் குவியல் மழைக்காலம் வந்தால் பேராபத்து காத்திருக்கு
வறண்ட நீர்நிலைகளில் மதுபாட்டில்கள் குவியல் மழைக்காலம் வந்தால் பேராபத்து காத்திருக்கு
ADDED : ஆக 07, 2025 11:14 PM

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட வறண்ட நீர்நிலைகளில் மதுபாட்டில்கள் குவியல் கிடப்பதால் மழைக்காலம் வரும் போது நீர் நிறைந்தால் அவை மனிதர்கள், கால்நடைகளின் காலில் குத்தி ஆபத்தை ஏற்படுத்தும்.
மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. பொதுப்பணித்துறையின் 342 கண்மாய்கள், ஊராட்சி ஒன்றியத்தின் 720 கண்மாய்கள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை வறண்டு காணப்படுகின்றன. இவை இந்த நிலையில் இருப்பது குடிமகன்களுக்கு சாதகமாக உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், மதகுகள் அடிப்பகுதியில் நிழல் சூழ்ந்து இருப்பதாலும் குடித்து விட்டு பாட்டில்களை நொறுக்குகின்றனர். இல்லையென்றால் அப்படியே போட்டு விட்டு வருகின்றனர்.
வழக்கமாக வடகிழக்கு பருவ மழை அக்டோபரில் துவங்கும். மழைக்கு பின் கண்மாய்கள் சிறிது நிரம்பினாலும் குளிப்பதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருவர். கால்நடைகளையும் குளிப்பாட்டுவர். இத்தகைய சூழலில் இப்பாட்டில்கள் அடித்து வரப்பட்டு விரவிக்கிடக்கும். நீர்நிலைகளில் களிமண்ணும் இருப்பதால் சறுக்கி விழுந்து இது போன்ற பாட்டில்கள் குத்தும் அபாயம் உள்ளது. கால்நடைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஊரில் குடிக்க நீர் இல்லாவிட்டாலும், மதுவுக்கு பஞ்சமில்லை என்பதை காட்டுவது போல தான் வறண்ட நீர்நிலைகளில் மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.
மாவட்ட நிர்வாகம் சிறப்புக் கவனம் எடுத்து நீர்நிலைகளில், அதன் மதகுகளில் குவிந்துள்ள மதுபாட்டில்களை அகற்ற ஊராட்சிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தற்போது மக்கள் பிரதிநிதிகள் வேறு இல்லாததால் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.