/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் குவிந்த வெளியூர் பக்தர்கள் அதிகரித்த பால்கோவா விற்பனை
/
ஸ்ரீவி.,யில் குவிந்த வெளியூர் பக்தர்கள் அதிகரித்த பால்கோவா விற்பனை
ஸ்ரீவி.,யில் குவிந்த வெளியூர் பக்தர்கள் அதிகரித்த பால்கோவா விற்பனை
ஸ்ரீவி.,யில் குவிந்த வெளியூர் பக்தர்கள் அதிகரித்த பால்கோவா விற்பனை
ADDED : அக் 07, 2024 04:53 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், ஆண்டாள் கோயில்களில் புரட்டாசி மூன்றாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான வெளி மாவட்ட பக்தர்கள் வந்ததால் பால்கோவா விற்பனை அதிகரித்தது.
பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டிருந்ததால் நேற்று முன் தினம் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஆண்டாள் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்ததால் ரத வீதி, மாட வீதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஆண்டாள் கோயிலிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கீழ ரத வீதி, பஸ் ஸ்டாண்ட்டை சுற்றியுள்ள சுவிட் ஸ்டால்களில் பால்கோவா வாங்கிச் சென்றனர். இதனால் அனைத்து பால்கோவா கடைகளிலும் வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மடங்கு பால்கோவா விற்பனை நடந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.