/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே பீடர் ரோட்டில் குழாய் உடைப்பு
/
ரயில்வே பீடர் ரோட்டில் குழாய் உடைப்பு
ADDED : ஜூலை 05, 2025 02:55 AM

சிவகாசி: சிவகாசி ரயில்வே பீடர் ரோட்டில் மீண்டும் மீண்டும் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ஓடி ஓடையில் கலப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி காந்திநகர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து ஆயில் மில் காலனி, ரயில்வே பீடர் ரோடு, தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியாகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் ரயில்வே பீடர் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி அருகில் உள்ள ஓடையில் கலந்தது. இங்கு குழாய் அடைப்பை சரி செய்த நிலையில் மீண்டும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. கோடை வெயில் கொளுத்துகின்ற நிலையில் மக்களுக்கு தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் இப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குழாய் உடைந்த இடத்தில் ரோடும் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக சேதம் அடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.