ADDED : ஜன 22, 2024 04:38 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரினை கோயிலுக்கு வரும் பக்தர்கள் எளிதில் தரிசிக்கும் வகையில், தகரக் கூண்டை எடுத்துவிட்டு பைபர் கூண்டு அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
மரச் சிற்பங்கள் வேலைப்பாடு கொண்ட இத்தேருக்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிறகு வெயில், மழையிலிருந்து பாதுகாக்க தகர செட் கொண்டு மூடப்பட்டிருந்தது. தேரோட்டத்தின் போது தகர செட் அகற்றப்பட்டு, விழா முடிந்த பின்பு மீண்டும் மூடப்படும்.
இந்நிலையில் ஆண்டாள் தேரினை பக்தர்கள் தரிசிக்கும் வகையில், தனியார் நிறுவன உதவியுடன் பல லட்சம் ரூபாய் செலவில் பைபர் கூண்டு அமைக்கும் பணி நேற்று முதல் துவங்கியது. ஒரு சில நாட்களில் பணிகள் முடிந்து பொதுமக்கள் பார்வையில் தேர் தெரியும் வகையில் கூண்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளை ஆண்டாள் கோயில் நிர்வாகம் செய்துள்ளது.