/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் கோயில் தேருக்கு பைபர் கூண்டு அமைப்பு
/
ஆண்டாள் கோயில் தேருக்கு பைபர் கூண்டு அமைப்பு
ADDED : ஜன 27, 2024 05:39 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரை மக்கள் எளிதில் பார்க்க வசதியாகவும், மழை, வெயிலில் இருந்து பாதுகாக்கவும் கூரையுடன் கூடிய பைபர் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு பெருமை வாய்ந்த இத்தேர் தகரம் கொண்டு மூடப்பட்டிருந்தது. ஆடிப்பூர தேரோட்டத் திருவிழாவின் போது தகர செட் பிரிக்கப்பட்டு, திருவிழா முடிந்த பின்பு மீண்டும் மூடப்பட்டு வந்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தேரை பார்க்க முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் தேரை பக்தகர்கள் பார்க்க வசதியாக தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் பல லட்சம் ரூபாய் செலவில் கூரையுடன் பைபர் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை- -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் அனைத்து மக்களும் தேரை பார்க்கலாம். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

