/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பிளக்ஸ்கள்
/
சாத்துாரில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பிளக்ஸ்கள்
சாத்துாரில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பிளக்ஸ்கள்
சாத்துாரில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பிளக்ஸ்கள்
ADDED : ஏப் 06, 2025 07:28 AM

சாத்துார் : சாத்துார் நான்கு வழிச்சாலை சந்திப்பில் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ள பிளக்ஸ் பேனர்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மக்கள் விபத்து அச்சத்துடன் உள்ளனர்.
சாத்துார் படந்தால் ஐங்ஷன் நான்கு வழிச்சாலையில் பயணிகள் நிழற்குடைக்கு அருகே பல நாட்களாக அரசியல் கட்சி , பள்ளிகளின் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.பலத்த காற்று வீசும் போது பிளக்ஸ் பேனர்கள் காற்றில் எங்கும் அங்கும் அசைந்தாடி வருகின்றன.
படந்தால் ஜங்ஷன் பகுதியில் மக்கள் சாலை ஓரத்தில் நின்று பஸ்களில் ஏறி வெளியூர் சென்று வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் மாதக்கணக்கில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது கம்புகள் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுகின்றன.
பலத்த காற்று வீசும் போது பேனர் முறிந்து பயணிகள் மீது விழும் அபாயம் உள்ளது.காலை மாலை நேரங்களில் இந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம் இதுபோன்ற தருணங்களில் பிளக்ஸ் பேனர்கள் காற்றில் சாய்ந்தால் பலர் படுகாயம் அடையும் அபாயம் உள்ளது.
துக்க நிகழ்ச்சிகளுக்கு வைக்கும் பேனர்களை மூன்று நாளில் அகற்றிவிடக் கூறும் போலீசார் நான்கு வழிச்சாலை ஓரத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்றாமல் இருப்பதன் ரகசியம் என்னவோ, விபத்து ஏற்படுவதற்கு முன்பு நான்கு வழிச்சாலை ஓரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை நகராட்சி, போலீசார் நிர்வாகத்தினர் அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, அவற்றை வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

