/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலச கொள்ளைக்கு திட்டம்: கைது 8
/
கலச கொள்ளைக்கு திட்டம்: கைது 8
ADDED : நவ 16, 2025 01:56 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதி கோயில்களில் கலசங்களை கொள்ளை அடிக்க திட்டமிட்ட 8 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன் கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முனியாண்டி கோயிலில் இருந்து குன்னூர் ரோடு முட்புதரில் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக 8 பேர் நின்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், ஆகாசம்பட்டி நவீன் குமார் 24, திண்டுக்கல் புகழேந்தி 48, சிவகாசி ராஜா 50, செம்பட்டையன்கால் கருப்பசாமி 43, சிவகாசி ஹரிஹரன் 22, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி 46, ஆனந்தராஜ்குமார் 44, குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ரமணன் 38 என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில்,ஆகாசம்பட்டி நவீன் குமார் தகவலின்பேரில் இக்கும்பல் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள கோயில் கலசங்களை கொள்ளையடிக்க திட்டமிட்டதும், இவர்களுக்கு இரிடியம் கும்பலுடன் தொடர்புள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

