/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் நிலங்களில் பனை விதைகள் நடவு
/
கோயில் நிலங்களில் பனை விதைகள் நடவு
ADDED : அக் 27, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: - தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மாநிலம் முழுவதும் பனை விதைகள் நடும்பனி கடந்த மாதம் முதல் துவங்கியது.
இதில் கோயில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பனை விதைகளை நடவு செய்ய அறநிலையத்துறை அறிவுறுத்தியது.அதன்படி ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமானநிலங்களில் 8 ஆயிரம் பன விதைகள் நடும்பணியை கோயில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் துவக்கி வைத்தார்.அத்திகுளம் தெய்வேந்திரி கிராமம் உட்பட பல்வேறு இடங்களில் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.

