நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே கூனம்பட்டியில் சிவகாசி ரோட்டரி பைரோசிட்டி சங்கம், பசுமை மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ரோட்டரி ஆளுநர்கள் தினேஷ் பாபு, டாக்டர் எபினேஷ் பென்சாம், பசுமை மன்றம் மரக் கன்று நடவு தலைவர் செல்வ குமார் தலைமை வகித்தனர். இயற்கை வளப்படுத்தும் வகையிலும், பள்ளிக்கூடத்திற்கு வழி செய்யும் பொருட்டு மியாவாக்கி குறுங்காடுகள் முறையில் 13 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஏற்பாடுகளை ரோட்டரி பைரோசிட்டி தலைவர் செந்தில், செயலாளர் மாதவன், திட்ட தலைவர் சுகுமார், முன்னாள் துணை ஆளுநர் வீரபத்திரன் பசுமை மன்றம் தலைவர் பால கிருஷ்ணன், நிர்வாகி செந்தில்குமார் செய்தனர்.

