/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் பைகள் வாகன ஓட்டிகள் அவதி
/
காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் பைகள் வாகன ஓட்டிகள் அவதி
காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் பைகள் வாகன ஓட்டிகள் அவதி
காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் பைகள் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 30, 2025 04:55 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் காற்றிற்கு பிளாஸ்டிக் பைகள் பறந்து ரோடு ஓரங்களில் குவிவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது.
அருப்புக்கோட்டையில் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகமாக உள்ளது. பொருட்களை வாங்கிவிட்டு பைகளை கண்ட இடங்களில் வீசி எறிகின்றனர். தற்போது ஒரு வார காலமாக காலையிலும், மாலையிலும் காற்று வேகமாக வீசுவதால் பலத்த காற்றிற்கு பிளாஸ்டிக் பைகள் பறந்து ரோடு ஓரங்களில் குவிகின்றன. ரோடுகளில் வரும் வாகன ஓட்டிகளின் மீது பைகள் படும்போது தடுமாற வேண்டியுள்ளது. மேலும் காற்றிற்கு பறந்த பிளாஸ்டிக் பை குப்பை ரோடு ஓரங்களில் குவிந்து கிடக்கின்றன. இவை காற்று அடிக்கும் போது பறந்து ரோட்டில் வரும் இருசக்கர வாகனங்களின் டயர்களில் சிக்கி கொள்வதால் சிரமப்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
நகராட்சியும் நெடுஞ்சாலை துறையும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளின் ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என நகராட்சியின் சுகாதார பிரிவு அறிவுறுத்த வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.