/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்காச்சோளம் சாகுபடிக்காக நிலங்களை உழுது: புரட்டாசி மாதம் பிறந்தும் மழையை எதிர்பார்த்து
/
மக்காச்சோளம் சாகுபடிக்காக நிலங்களை உழுது: புரட்டாசி மாதம் பிறந்தும் மழையை எதிர்பார்த்து
மக்காச்சோளம் சாகுபடிக்காக நிலங்களை உழுது: புரட்டாசி மாதம் பிறந்தும் மழையை எதிர்பார்த்து
மக்காச்சோளம் சாகுபடிக்காக நிலங்களை உழுது: புரட்டாசி மாதம் பிறந்தும் மழையை எதிர்பார்த்து
ADDED : செப் 26, 2024 04:34 AM

மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்பருத்தி, மக்காச்சோளம் சாகுபடி அதிகளவில் ஆண்டு தோறும் நடந்து வருகிறது.
மேற்கு பகுதியான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு போன்ற மலை அடிவாரப்பகுதிகளில் நெல், வாழை போன்ற பயிர்கள் அதிகஅளவில் விவசாயம் செய்யப்பட்டு வந்தாலும் அந்த நகரங்களின் கிழக்கு பகுதி கிராமங்களில் பருவ மழையை நம்பி பருத்தி, மக்காச்சோளம் பயிரிட்டும்வருகின்றனர்.
இதற்காக ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து ஆவணி மாதம் முதல் தங்கள் நிலங்களை பண்படுத்தி தயார் நிலையில் வைத்திருப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும்மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஒன்றிய பகுதிகள் ஆலங்குளம், வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, சாத்தூர், இருக்கன்குடி, பாலவனத்தம், பந்தல்குடி, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணர், விருதுநகர், எரிச்சநத்தம், அழகாபுரி, எம். புதுப்பட்டி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து பருத்தி, மக்காச்சோளம் சாகுபடிக்காக தங்கள் விளைநிலங்களை உழவு செய்து பண்படுத்தி தயார் நிலையில் வைத்துள்ளனர்.
ஆனால் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் பெய்யும் மழை தற்போது புரட்டாசி மாதம் பிறந்தும்பெய்யாமல் இருப்பதாலும், வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதாலும் வடகிழக்கு பருவமழை போதி அளவில் பெய்யுமா என்ற எதிர்பார்ப்புடன் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து நாச்சியார் பட்டி விவசாயி ராஜேஷ் கூறுகையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை விருதுநகர் மாவட்டத்தில் பெரிய அளவில் பெய்யாததால் விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆவணி பட்டத்தில்நல்ல மழை பெய்ததால் அப்போதே விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்கள் பயிர் செய்தனர் ஆனால், இந்த ஆண்டு ஆவணி மாதத்திலும் மழை பெய்யவில்லை.
தற்போது புரட்டாசி மாதம் பிறந்தும் மழைக்குரிய அறிகுறியே இல்லாமல் வெயிலின் தாக்கம்அதிகமாக காணப்படுகிறது. இருந்த போதிலும் எங்கள் நிலங்களை தயார் படுத்தி வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்.